இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள்
இஸ்லாத்தின் கடமைகள் :
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் ஐந்து ஆகும் . இந்த ஐந்து கடமைகளை இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்றும் கூறுவார்கள் ...
இஸ்லாத்தில் அனைவரும் கட்டாயம் இந்த கடமைகளை நிறைவேற்றி இருக்க வேண்டும்
அவை : 1 கலிமா , 2.தொழுகை , 3நோன்பு , 4. ஜக்காத் , 5. ஹஜ்
1.கலிமா :
இஸலாத்தில் முதலாவது கடமை கலிமா ஆகும். கலிமா என்பது ஒரு மனிதன் தன் உள்ளத்தால் இறைவன் ஒருவனே அவனே வணக்கத்திற்குரியவன் என்று உறுதி கொண்டு முஹம்மது ரஸூலில்லாஹ் அவர்கள் அல்லாஹுவின் இறை தூதர் என்று நம்புவதும் கலிமா ஆகும் ...
2.தொழுகை :
இஸ்லாத்தில் தினமும் ஐந்து வேலை இறைவனை தோகையின் மூலம் வணங்குவது என்பது கட்டாய கடமை ஆகும் ... இஸ்லாமியர் என்று சொல்லி கொள்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது தொழுகை ஆகும் தொழுகாமல் ஒருவர் நன் முஸ்லீம் என்று சொல்லி கொள்வதில் எந்த பயனும் இல்லை ..
தினமும் தொழுவதால் உள்ள தூய்மையும், மண தூய்மையும் உண்டாகிறது ஒரு நிலையான மனிதனாய் வலி செய்கிறது இந்த தொழுகை முறை ... இஸ்லாத்தில் தொழுகை என்பது தலையாய கடமையாக கருத படுகிறது .
3.நோன்பு :
இஸ்லாத்தில் மூன்றாவது கடமையாக இருப்பது நோன்பு ஆகும் ..
நோன்பு என்பது ரமலான் மாதத்தில் இருவனுக்காக உணவு ,மனம் ,ஆரோக்கியம் என அனைத்தையும் விடுத்து இறைவனுக்காக இறைவனை மட்டுமே எண்ணி இருவனுக்காக ஒருமாத காலம் இறைவனுக்காக வாழ்வது நோன்பு ஆகும் ..
நோன்பு நோர்க்கும் முறை :
நோன்பு நோற்பதற்கு முதல் தகுதி தூய்மை ஆகும் .. தினமும் உள்ளமும் மனமும் தூயமையாக இருக்க வேண்டும் .. தினமும் சூரியன் உதயம் ஆவதற்கு முன் எழுந்து உணவு உன்ன வேண்டும் .. அதன் பின் சூரியன் மறைவிற்கு பிறகு தன உணவு உட்க்கொள்ள வேண்டும் இதற்க்கு இடைப்பட்ட காலத்தில் உணவு அருந்த கூடாது (குறிப்பாக தண்ணீர் கூட அருந்த கூடாது ).
மேலும் நோன்பு என்பது உணவு மட்டும் அருந்தாமல் இருப்பதால் மட்டுமே நோன்பு நிறைவேறாது .. நோன்பு நோற்கும் பொது உள்ளமும் உடலும் கட்டாயம் தூய்மையாக இருக்க வேண்டும் . முக்கியமாக கண்டிப்பாக தொழுகையை கடை பிடிக்க வேண்டும் அவ்வாறு தொழுகையை கடை பிடிக்காமல் வெறும் உணவு அருந்தாமல் இருந்தால் அது நோன்பாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது மாறாக வெறும் பட்டினியாக இருந்ததாகவே கருத படும் .
4.ஜக்காத் :
பொதுவாக இஸ்லாத்தின் முக்கிய நோக்கமே மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே ஆகும் . அதே போல் பொருளாதார அடிப்படையில் மனிதர்களை சமநிலை அடிவதற்க்காக இஸ்லாத்தில் உள்ள ஒரு முக்கிய 8கடமை ஜக்காத் ஆகும் .
பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் தங்கள் தேவைக்கு போக ஒரு பகுதியை பொருளாதாரத்தில் ஏழை எளிய மக்களுக்கு கட்டியம் கொடுக்க வேண்டும் இதனால் ஏழை மக்களும் பொருளாதாரத்தில் சமநிலை அடைய வலி வகுக்கும் .. ஜக்காத் கொடுப்பது இஸ்லாத்தில் மிக உன்னதமான கடமையாகும் ..
5.ஹஜ் :
ஹஜ் என்பது இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்ற புனித தளத்திற்கு ஒருமுறையாவது சென்று வருவதே ஹஜ் ஆகும்
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹ் வ பரக்காத்தஹு
1 Comments
MashaAllah🤩
ReplyDelete