who is super muslim ? சூப்பர் முஸ்லீம் என்றால் என்ன ?

                                                                   

what is super muslim

      


                                                               Super Muslim 

                                                                      
                                                                     சூப்பர் முஸ்லீம்


            
சூப்பர் முஸ்லீம் என்றால் என்ன ?:
            
                      சூப்பர் முஸ்லீம் என்பது தனிப்பட்ட இயக்கமோ அமைப்போ இல்லை . அது ஒரு தனி நபர் இஸ்லாமிய சமந்த பட்ட அனைத்து விஷயங்களையும் அவருடைய பார்வையிலும் தனி பட்ட அனுமானத்தின் அடிப்படையில் பதிய படும் கருத்துக்களே ஆகும் . 
                       
                       சூப்பர் முஸ்லீம் என்ற  யூடுப் சேனல் மூலம் இந்த தகவல்களை பதிவு செய்கிறார்கள் .
 
சூப்பர் முஸ்லீம் நோக்கம் :
            
                        சூப்பர் முஸ்லீம் நோக்கம் என்னவென்றால் எந்த தனி பட்ட விருப்பு வெறுப்பு இன்றி இஸ்லாத்தின் அடிப்படையான குரானை ஆய்வு படுத்தி அதில் உள்ள கருத்துக்களை அவர்களின் பார்வையில் கூறுகிறார்கள் இதில் தவறுகளும் இருக்கலாம் அனால் ஒரு புதிய பார்வையில் குரானை  அணுகுவது எந்த விதத்திலும் தவறு ஆகாது .

                        குரான் என்பது இஸ்லாமியரின் புனித நூல் ஆகும் . இந்த குரானில் வாழ்வின் அணைத்து கேள்விகளுக்கும் பதில் தரும் படியான அனைத்து வசனங்களும் இடம் பெற்றுள்ளது .. இந்த வசனங்கள் அனைத்தும் முழுமையாக ஆராய்ச்சி செய்து பலரும் பல விளக்கங்களை கொடுத்து வருகின்றனர் ... அதே போல் சூப்பர் முஸ்லீம் அவர்களும் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை கூறி இருக்கின்றார்கள் .. அதை நாம் ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் மக்களாகிய நம்முடைய கையில் உள்ளது .. 
 
                       நாம் அனைவரும் அனைவருடைய கருத்துக்களும் குறை கூறாமல் நாம் என்ன அதில் இருந்து கற்று கொள்கிறோம் என்பதே முக்கியம் 

                      சூப்பர் முஸ்லீம் அவர்களின் முக்கிய நோக்கம் தனிப்பட்ட அமைப்பை உருவாக்குவது அல்ல .. மாறாக புதிய பார்வையில் குரானை அணுகி தெளிவு படுத்துவதே ஆகும் ...

                     சூப்பர் முஸ்லீம் யூடுப் சேனலின் நிர்வாகி  முஸ்தபா அவர்கள் ...

சூப்பர் முஸ்லீம் முஸ்தபா அவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக மறுமை நாளின் அடையாளம் தஜ்ஜால்  வருகை என்ற கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்று மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது இதனால் சூப்பர் முஸ்லீம் இஸ்லாமியர்களின் இடையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை ..

   
                                                    அஸ்ஸலாமு அலைக்கும் 
                                       வரஹ்மத்துல்லாஹ் வ பார்க்காதஹு 

Post a Comment

0 Comments