![]() |
Sunnath jamath |
சுன்னத் ஜமாத் என்றால் என்ன ?
சுன்னத் ஜமாத் :
பொதுவாக இஸ்லாம் மார்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றது அதில் பெருபான்மையாக பார்க்க படுவது சுன்னத் ஜமாத் ஆகும் இந்த சுன்னத் ஜமாத் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் அதிகம் காணப்படுகிறது ..
இஸ்லாம் மார்க்கம் பொதுவாக ஒரே இறை கொள்கையை பின்பற்றுகிறது இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை அதே போல் சுன்னத் ஜமாத் ஒரே இறை கொள்கையை பின்பற்றி கொண்டும் மேலும் அல்லாஹுவின் இறை தூதர்களையும் வணங்குகின்றனர் இதுவே சுன்னத் ஜமாத் ஆகும்.
சுன்னத் ஜமாத் என்ன செய்கிறார்கள் :
சுன்னத் ஜமாத் அனைவரைபோலவும் இஸ்லாத்தின் அணைத்து கடமைகளும் சிறப்பாகவே செய்கின்றனர் உதாரணமாக ஐந்து வேலை தொழுகை , நோன்பு கடை பிடிப்பது , ஜக்காத் கொடுப்பது , ஹஜ் செய்வது என்ற அனைத்து கடமைகளும் முழுமையாக செய்கின்றனர் மேலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாழ்ந்து கட்டிய அனைத்து வாழ்க்கை வழிமுறைகளும் கடைபிடிக்கின்றனர் ..
சுன்னத் ஜமாத் மேல் வைக்கப்படும் குறைபாடுகள் :
சுன்னத் ஜமாத் மக்கள் இஸ்லாமிய வழிமுறைகளை செம்மையாக செய்தலும் சில குறைபாடுகளும் விமர்ச்சனங்களும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டு வருகின்றனர் .. அதாவது
1.தர்கா வழிபாடு
2.இறந்தவர்களுக்கு பாத்திஹா ஓதுவது
3மவுழுது ஓதுவது
4.சந்தனக்கூடு வழிபாடு
5.சகபாக்களை வணங்குவது
இஸ்லாத்தில் ஒரு இறை கொள்கை மட்டுமே பின்பற்ற படுகிறது அனால் சுன்னத் ஜாமத்தில் மேற்கூறிய சில மூட நம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றனர் மேற்குறிய செயல்கள் இஸ்லாத்திற்கு மாறாக உள்ளதாக சுன்னத் ஜமாத் மேல் குற்றம் சாட்ட படுகிறது இந்த குற்ற சாட்டுகள் சிலர் ஏற்று கொண்டாலும் சிலர் ஏற்று கொள்வதில்லை . இதற்க்கு ஒரு நிரந்தர தீர்வும் இதுவரை கொண்டு வரப்படவும் இல்லை
மேலும் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளது அதை வேறு பதிவுகளில் பார்க்கலாம் .
இஸ்லாம் என்றல் அனைவரும் ஒரே குளம் . ஒற்றுமையான ஒரே இனம் என்ற ஒற்றுமையை மட்டுமே கற்று தருகிறது அனால் இஸ்லாத்தில் அனைவரும் ஒன்றாக இருப்பதில்லை அவர்களுக்குள்ளாகவே பல பிரிவுகளாக பிரிந்து தன இருக்கின்றனர் ..
" இஸ்லாம் உலகில் தலை சிறந்த மார்க்கம்
அனால் அதை இஸ்லாமியர்கள் தன சரியாக பின்பற்றுவதில்லை "
இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இஸ்லாத்தின் முழுமையான நோக்கத்தை அறிந்து முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிப்போம் .
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹ் வ பரக்காத்தஹு
0 Comments