நோன்பு என்றல் என்ன ?
நோன்பு :
நோன்பு என்பது இஸ்லாத்தின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும் . இஸ்லாம் மார்கத்தில் முக்கிய கடமையாக நோன்பு கருத படுகிறது . இஸ்லாமியர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு மாதம் அதாவது வருடத்தின் ரமலான் மாதத்தில் முழுவதும் நோன்பு நோற்று தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள்
நோன்பு எப்படி கடை பிடிக்க படுகிறது :
நோன்பு என்பது நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களுடைய ஆசைகளும் ,தேவைகளும் விடுத்து இறைவன் மட்டுமே என்று இறைவனின் நினைவிலேயே இருப்பது நோன்பு ஆகும்
இஸ்லாம் மாதமான ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாலும் தினமும் காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே எழுந்து உடல் தூய்மை உள்ளத்தூய்மை இரண்டையும் உறுதி படுத்திக்கொண்டு சூரியன் உதயமாவதற்குள் உணவினை உண்டு விட வேண்டும் அதன் பிறகு சூரியன் மறிந்த பிறகு தன உணவினை உன்ன வேண்டும் இதற்க்கு இடையில் எந்த உணவுகளையும் உன்ன கூடாது இப்படியாக நோன்பு கடை பிடிக்க படுகிறது
பசித்திருத்தல் மட்டும் நோன்பு ஆகுமா ?
பொதுவாக மக்கள் அனைவரும் நினைப்பது நோன்பு என்பது ஒருநாள் முழுவதும் வெறும் வயிற்றில் பசியோடு இருந்தால் மட்டும் போதும் என்று எண்ணுகின்றனர் ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும் . பசித்திருப்பது மட்டும் நோன்பு ஆகாது பேசியது இருப்பது மட்டும் நோன்பை நிறைவேற்றி விடாது . அதை விட முக்கியம் நம்மை படைத்த இறைவனின் நினைவில் இருப்பதே ஆகும் நோன்பு நோற்கும் களங்களில் கண்டிப்பாக இறைவனின் நினைவில் மட்டுமே இருக்க வேண்டும் வேறு எந்த சிந்தனைகளும் இருக்க கூடாது மேலும் நோன்பு காலங்களில் கடமையாக்க பட்ட அனைத்து தொழுகைகளையும் கட்டாயம் தொழுகை வேண்டும். இறைவனின் நினைவும் தொழுகையும் இல்லாமல் வெறும் பட்டினியாக மட்டும் இருந்தால் அது நோன்பாக ஏற்றுக்கொள்ளபடாது
நோன்பு முழுமையாக வேண்டும் என்றல் இறைவனின் நினைவும் மனத்தூய்மையும் உள்ளத்தூய்மையும் உடல் தூய்மையும் கட்டாயம் வேண்டும் அப்போதுதான் நோன்பு முழுமை அடையும்
இன்ஷா அல்லாஹ் நாம் நோன்பின் மகத்துவத்தை முழுமையாக அறிந்து அதனை நாம் முழுமையாகவும் சரியாகவும் பின்பற்றி அல்லாஹ்விடத்தில் சொர்கம் செல்ல முயற்சிப்போமாக
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்தஹு
0 Comments